லாக்டவுன் காலத்தில் கரீபியன் தீவுகளுக்கு உல்லாசப் பிரயாணம் மேற்கொண்ட கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தின் நிதி அமைச்சர் ரொட் பில்லிப் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் தன்னால் ஏற்பட்ட தவறுக்கு அவர் மன்னிப்பும் கோரியுள்ளனர்.
கொரோனா வைரஸ் பிரச்சினையினால் கனடாவின் மக்கள் தொகை கூடிய மாகாணமான ஒண்டாரியோ உற்பட ஏனைய சில மாகாணங்களும் லாக்டவுன் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. மேலும் இங்கே வசிக்கும் மக்கள் அநாவசியமான பயணங்களை மேற்கொள்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறான ஓர் சூழ்நிலையிலேயே குறித்த ஒண்டாரியோ மாகாண அமைச்சர் கரீபியன் தீவொன்றுக்கு உல்லாசப் பிரயாணம் மேற்கொண்டு இரண்டு வாரங்களுக்கு அங்கே தங்கியிருந்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், தான் இவ்வாறு பிரயாணம் செய்தமையால் ஏற்பட்ட தவறில் இருந்து தப்பிக்க எந்தவொரு காரணத்தையும் முன்வைக்க விரும்பவில்லை எனவும், இவ்வாறான ஓர் சூழ்நிலையில் நான் பயணித்திருக்கக் கூடாதெனவும் குறித்த அமைச்சர் தெரிவித்துள்ளார்.
إرسال تعليق