கொரோனா தொற்று உறுதி செய்யப்பட பின்னர் இறந்த 2 மாத குழந்தையின் உடலை ஏற்றுக்கொள்ளாமல் தப்பிச்சென்ற பெற்றோர் பற்றிய ஓர் செய்தி இந்தியாவின் ஜம்மு பிரதேச மருத்துவமனையில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் ஜம்முவில் உள்ள ஸ்ரீ மகாராஜா குலாப் சிங் மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளது.
குழந்தைக்கு பிறவியிலே இதயம் தொடர்பான பிரச்சினைகள் இருந்துள்ளதாகவும் கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்ட பின்னர் குழந்தை இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குழந்தையின் உடலை ஏற்காமல் பெற்றோர் மருத்துவமனையில் இருந்து தப்பியோடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குழந்தையின் பெற்றோரை தொடர்புகொள்ள எவ்வளவோ முயற்சி செய்தும் அது பயனளிக்கவில்லை என மருத்துவமனை அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
பெற்றோர் உடலை பெற்றுக்கொள்ள முன்வராத பட்சத்தில் குறித்த மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள குழந்தையின் உடல் தொடர்பான இறுதி சடங்குகள் கொரோனா விதிமுறைகளின் படி இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
إرسال تعليق