எனது தாய் என் கண் முன்னே கற்பழிக்கப்பட்டார். என்னை காப்பாற்றவே அவர் அவ்வாறு செய்தார்.


எனது தாய் என் கண் முன்னே கற்பழிக்கப்பட்டார். எனக்கு அப்போது 13 வயது இருக்கும். உண்மையில் நானே அவர்களின் இலக்காக இருந்தேன். என்னை காப்பாற்றவே எனது தாய் அவ்வாறு செய்தார். 

வட கொரியாவில் இருந்து கொண்டு ஒரு ஆங்கில திரைப்படம் பார்த்த குற்றத்துக்காக என் நண்பியின் தாய் கொல்லப்பட்டார். வெளிநாடுகளுக்கு தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டதற்காக தனது பிரஜைகளை கொலைசெய்யும் உலகின் ஒரே நாடு வட கொரியாவாகும்.

வட கொரியாவில் இருந்து தப்பி வந்த போது சிறுமியாக இருந்த Yeonmi Park இன் துயரக் கதை மெய்சிலிர்க்க வைக்கிறது.

இவர் 2007 ஆம் ஆண்டு வட கொரியாவில் இருந்து சீனாவுக்கு தப்பிச் சென்று, 2009 இல் தென் கொரியாவில் வசித்து வந்தார். பின்னர் 2014 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்து சென்றார். தற்போது அங்கே மனித உரிமை செயற்பாட்டாளராகவும், பெரும் துயரத்தில் சிக்கி வாழ்ந்துகொண்டிருக்கும் வட கொரிய மக்களுக்காக குரல்கொடுக்கும் ஒருவராகவும் செயற்பட்டு வருகிறார்.

அவரின் முழு உரையையும் கீழே உள்ள காணொளியில் கண்டுகொள்ளலாம்.

Post a Comment

أحدث أقدم